Tuesday, 27 December 2011

என் சொற்கள்

வெடிகளாய்ப் பற்ற வைத்து
வீசியெறிவேன்
என் சொற்களை
உனது இருண்ட கானகமெங்கும்

நீ எரிந்து
நான் எரியும் வரை

இங்கு பிரியங்களுக்கும்
பிரிதலுக்குமான
காரணங்கள்
ஒன்று போலவே இருக்கின்றன

மிக மிக அபத்தமாக.
                      

1 comment:

  1. நீயெறிந்து
    நானெறியும் வரை அருமையான வரிகள்

    ReplyDelete