Wednesday, 21 December 2011

கிரகணம்

மூடிக்கொண்டே வருகின்றன

என் விரல்களை
உன் விரல்கள்

என் கைகளை
உன் கைகள்

என் இமைகளை
உன் இமைகள்

என் இதழ்களை
உன் இதழ்கள்

என் நெற்றியை
உன் நெற்றி

என் நெஞ்சை
உன் நெஞ்சு

என் உடலை
உன் உடல்

என் உயிரை
உன் உயிர்

இவ்வுலகை
நம் உலகு

இடையூறுகள் எதுவுமின்றி
இங்கே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது

ஒரு
பூரண கிரகணம்.



1 comment:

  1. காதலின் கவித்துவம் அருமை என்பதி விட என்னிடம் வார்த்தைகள் இல்லை

    ReplyDelete