Thursday, 12 January 2012

அன்பிற்கான நேரம்

உன் அன்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரம்                          
காத்திருக்கிறது
புன்னகை ஏந்திய பூங்கொத்துகளுடன்

உன் வருகை
நிகழாதென உணர்ந்திருந்தும்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
உன் அன்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரம்                              

நம்பிக்கை வளர்த்த
பெருமர நிழலின்
பாதங்களில் அமர்ந்தபடியே
உலகை
வெவ்வேறு விதமாக
ஒப்பனை செய்து
விடைபெற்று மீளும்
பருவங்களை பார்த்தபடியே
காத்திருக்கிறது                                  

பூங்கொத்துகள் உதிர்ந்து வளர்த்த
பூங்காடுகளுக்கு நடுவே
பூங்கொத்துகளோடு
                       

1 comment:

  1. நம்பிக்கையின் பிடிக்குள் தீவிரமாய் அகப்பட்ட மனம், அன்புக்குரிய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருத்தலை ஏக்கத்துடன் வெளிப்படுத்திய விதம் அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete