Monday, 21 November 2011

இயலாமைகள்

வாசல் வரை
வந்து வழியனுப்ப
உன்னால் முடிவதில்லை
எப்போதும்

வாயில் கடந்து
சாலைக்கு வந்த பின்னும்
உன் வீட்டு நிலைப்படியில்
ஒரு கணம்
சாய்ந்து மீள்கின்றன
உவர்நீர் சுரக்கும் என் விழிகள்

இயலாமைகள்
எனக்கும் உண்டு

No comments:

Post a Comment