பூமியில் வசிப்பவளும்
பெண் எனப்பட்டவளுமான நான்
கடவுளின் வீர தீர பராக்கிரம செயல்களை
கேட்டும் படித்தும்
அவர் மீது தீராத காதல் கொண்டேன்
உலகின் குறுக்கு வழிகளிலெல்லாம் பயணித்து
ஒரு வழியாய் அவரை அடைந்தேன்
பின் அவரை அடைந்தேன்
கடவுளுக்கும் எனக்குமான
மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட
மானிடர் அஞ்சியதால் வேறு வழியின்றி
சாத்தானின் தயவை நாடினோம்
வசீகரமான அவனது கையெழுத்தில்
தம்பதிகள் ஆனோம்
இனிமையான வாதங்களைச் சுமந்தபடி
வெளியேறியது எங்கள் முதலிரவு
வெளி அவரது வீடாக இருந்தது
வரவேற்பறை
சமையலறை
குளியலறையென
அவர் சுட்டிய அனைத்தும்
சுவர்களற்ற வெளியாகவே இருந்தது
தான் படைத்ததாக
பெருமிதத்தோடு அவர் காண்பித்த
வானம்
நட்சத்திரங்கள்
கோள்கள்
நிலவுகள்
விண்கற்கள் அனைத்துமே
உயிற்றவையாக இருந்தன
உறக்கமில்லை எனினும்
படுக்கத் தோன்றியது
பசிக்கவில்லை எனினும்
சமைக்கத் தோன்றியது
யாருமில்லை எனினும்
உடுத்தத் தோன்றியது
கூடவில்லை எனினும்
குளிக்கத் தோன்றியது
கடவுளை மனிதர் அறிந்திருப்பது
அதிர்ஷ்டவசம்
கடவுள் பூமியை அறியாதிருப்பது
துரதிர்ஷ்டவசம்
யாருமற்ற வெளி நாளுக்கு நாள்
என்னில் வெறுமையை நிரப்ப
கடவுளுக்கும் எனக்கும் இடையே
பூமி வளர்ந்த வண்ணம் இருந்தது
இன்று எங்கள் மண முறிவு நாள்
சாட்சிக் கையெழுத்திட
நீண்ட வரிசையில் மனிதர்கள்
மீண்டும் சாத்தானை அழைக்கிறோம்
முறுவலுடன் கையெழுத்திட்டு
பூமியை எனக்கு பரிசளிக்கும் அவனிடம்
ஏனோ கடவுளின் சாயல்
நானும் கடவுளும்
கைக் குலுக்கிப் பிரிந்தோம்
இப்போதும் கடவுளின் முகம்
சிலையைப் போலவே
அமைதியும் அழகும்
நிறைந்து பிரகாசிக்கிறது.
பெண் எனப்பட்டவளுமான நான்
கடவுளின் வீர தீர பராக்கிரம செயல்களை
கேட்டும் படித்தும்
அவர் மீது தீராத காதல் கொண்டேன்
உலகின் குறுக்கு வழிகளிலெல்லாம் பயணித்து
ஒரு வழியாய் அவரை அடைந்தேன்
பின் அவரை அடைந்தேன்
கடவுளுக்கும் எனக்குமான
மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட
மானிடர் அஞ்சியதால் வேறு வழியின்றி
சாத்தானின் தயவை நாடினோம்
வசீகரமான அவனது கையெழுத்தில்
தம்பதிகள் ஆனோம்
இனிமையான வாதங்களைச் சுமந்தபடி
வெளியேறியது எங்கள் முதலிரவு
வெளி அவரது வீடாக இருந்தது
வரவேற்பறை
சமையலறை
குளியலறையென
அவர் சுட்டிய அனைத்தும்
சுவர்களற்ற வெளியாகவே இருந்தது
தான் படைத்ததாக
பெருமிதத்தோடு அவர் காண்பித்த
வானம்
நட்சத்திரங்கள்
கோள்கள்
நிலவுகள்
விண்கற்கள் அனைத்துமே
உயிற்றவையாக இருந்தன
உறக்கமில்லை எனினும்
படுக்கத் தோன்றியது
பசிக்கவில்லை எனினும்
சமைக்கத் தோன்றியது
யாருமில்லை எனினும்
உடுத்தத் தோன்றியது
கூடவில்லை எனினும்
குளிக்கத் தோன்றியது
கடவுளை மனிதர் அறிந்திருப்பது
அதிர்ஷ்டவசம்
கடவுள் பூமியை அறியாதிருப்பது
துரதிர்ஷ்டவசம்
யாருமற்ற வெளி நாளுக்கு நாள்
என்னில் வெறுமையை நிரப்ப
கடவுளுக்கும் எனக்கும் இடையே
பூமி வளர்ந்த வண்ணம் இருந்தது
இன்று எங்கள் மண முறிவு நாள்
சாட்சிக் கையெழுத்திட
நீண்ட வரிசையில் மனிதர்கள்
மீண்டும் சாத்தானை அழைக்கிறோம்
முறுவலுடன் கையெழுத்திட்டு
பூமியை எனக்கு பரிசளிக்கும் அவனிடம்
ஏனோ கடவுளின் சாயல்
நானும் கடவுளும்
கைக் குலுக்கிப் பிரிந்தோம்
இப்போதும் கடவுளின் முகம்
சிலையைப் போலவே
அமைதியும் அழகும்
நிறைந்து பிரகாசிக்கிறது.